ADDED : செப் 22, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கூலித்தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 58; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர், இவர் தினமும் குடித்து விட்டு மனைவி பழனியம்மாள், மகன் சுரேஷ் ஆகியோருடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் பழனியம்மாள் மற்றும் சுரேஷ் இருவரும் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியே சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டில் கண்ணன், மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
