/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
/
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
ADDED : அக் 21, 2024 10:34 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு உயர்நிலை-மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
ஆய்வுக்கூட்டத்திற்கு தமிழக முறைசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனரான, மாவட்ட கல்வித்துறை கண்காணிப்பு அலுவலர் நாகராஜ முருகன் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார். டி.இ.ஓ.க்கள் துரைராஜ், ரேணுகோபால், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, செந்தில்குமார் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தின் அனைத்து அரசு, ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 162 பேர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய கண்காணிப்பு அலுவலர் 'மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை வரும் கல்வியாண்டு முதல் உயர்த்திட வேண்டும். மாணவர்களின் கல்வி நலம் மற்றும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் ஆகியவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும் என பேசினார்.
பழனியாப்பிள்ளை நன்றி கூறினார்.

