/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலக துாய்மை நாள் கருத்தரங்கம்
/
உலக துாய்மை நாள் கருத்தரங்கம்
ADDED : செப் 23, 2025 09:25 PM

கள்ளக்குறிச்சி, ; ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உலக துாய்மைப்படுத்தும் நாள் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். டீன் அசோக் முன்னிலை வகித்தார். வணிக மேலாண்மை துறைத் தலைவர் ராஜா வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஹேமலதா வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளர் கள்ளக்குறிச்சி குயிலி தொண்டு நிறுவன நிறுவனர் கீர்த்தி செல்வராஜ், நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், துாய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும், ஏரி, குளங்களில் துாய்மைப்படுத்துவது மாணவர்களின் பங்கு குறித்து பேசினார்.
தொடர்ந்து, ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவமும், குயிலி தொண்டு நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் ஜான் விக்டர் நன்றி கூறினார்.