தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மாணவர்களுக்கு உலக மரபு வார விழா போட்டிகள்

மாணவர்களுக்கு உலக மரபு வார விழா போட்டிகள்

மாணவர்களுக்கு உலக மரபு வார விழா போட்டிகள்


UPDATED : நவ 29, 2026 08:30 PM

ADDED : நவ 29, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 08:30 PM ADDED : நவ 29, 2026 08:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் துறை, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

உலக மரபு வார விழாவையொட்டி, மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 60 பேர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 70 பேர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆயிஷா பேகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத் தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் துறை உதவி இயக்குநர் லோகநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் சிறப்புரையாற்றினார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர்கள் வெங்கடேசன், சங்கீதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அல்லி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உதவி தலைமை ஆசிரியர் காயத்ரி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us