/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 12, 2025 03:43 AM

கள்ளக்குறிச்சி: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண்ணிற்கு திருமண வயது 21, மக்கள் தொகை கட்டுபடுத்துவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த விழிப்புணர்வு பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் பவானி, குடும்ப நல துணை இயக்குனர் பத்மாவதி, ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாலினி மற்றும் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.