/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலக திருக்குறள் கூட்டமைப்பு; கோரிக்கை முழக்க பேரணி
/
உலக திருக்குறள் கூட்டமைப்பு; கோரிக்கை முழக்க பேரணி
உலக திருக்குறள் கூட்டமைப்பு; கோரிக்கை முழக்க பேரணி
உலக திருக்குறள் கூட்டமைப்பு; கோரிக்கை முழக்க பேரணி
ADDED : நவ 12, 2024 10:13 PM

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே துவங்கிய பேரணிக்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். செயலாளர் அம்பேத்கர் வரவேற்றார்.
இதில் திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும். செம்மொழி தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும். சென்னை - மதுரை உயர்நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ்மொழியை அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணி நடந்தது.
பேரணியில், மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல், முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன், மதிவாணன், முத்துலட்சுமி, வளர்மதி, பிரகாஷ், விஜயகுமார், சண்முகப்பிச்சப்பிள்ளை, கிருஷ்ணன், கருணாநிதி, சவுந்தர், வினோபன், முத்தமிழ்சித்தன், கலைமகள் காயத்திரி, கோவிந்தராஜ், கலியசெல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். வழக்கறிஞர் பெரியசாமி நன்றி கூறினார்.

