/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் வழிபாடு
/
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் வழிபாடு
ADDED : டிச 20, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் மார்கழி திருவெண்பாவை வழிபாடு நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் மார்கழி திருவெண்பாவை வழிபாடு பெண்களின் நற்பலன் வேண்டி நடத்தப்படுகிறது.
தினமும் அதிகாலையில் கோ பூஜைக்குப்பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, திருமுறை விண்ணப்பம், திருவெண்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருநாவுக்கரசு, திருமடம் நாச்சியப்பன் செய்து வருகிறார்.