/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு நிறுவன உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு
/
கூட்டுறவு நிறுவன உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு
ADDED : அக் 12, 2025 10:36 PM

கள்ளக்குறிச்சி; மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடத்திற்கான எழுத்து தேர்வு நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் 35 உதவியாளர், ஒரு மேற்பார்வையாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 10 உதவியாளர் என மொத்தமாக 46 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதற்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு கடந்த ஆக., மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு 813 பேர் விண்ணப்பித்தனர்.
இதில், உரிய கல்வி தகுதி இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் 61 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
மீதமுள்ள 752 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட எழுத்துத்தேர்வு கள்ளக்குறிச்சி பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் நேற்று முன்தினம் நடந்தது. 605 நபர்கள் தேர்வு எழுதினர். 147 பேர் ஆப்சன்ட் ஆகினர்.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பிருந்தா, கள்ளக்குறிச்சி டி.ஆர்.ஓ., ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகே சன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயகுமாரி, கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன் ஆகியோர் தேர்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.