/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொறியியல் பணிக்கு எழுத்து தேர்வு; 745 பேர் பங்கேற்பு: கலெக்டர் தகவல்
/
பொறியியல் பணிக்கு எழுத்து தேர்வு; 745 பேர் பங்கேற்பு: கலெக்டர் தகவல்
பொறியியல் பணிக்கு எழுத்து தேர்வு; 745 பேர் பங்கேற்பு: கலெக்டர் தகவல்
பொறியியல் பணிக்கு எழுத்து தேர்வு; 745 பேர் பங்கேற்பு: கலெக்டர் தகவல்
ADDED : ஜன 05, 2024 12:09 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வில் 745 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை(6 ம் தேதி), வரும் 7 ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேலைகளிலும் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வு மையத்தின் மூலம் ஏ.கே.டி., பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைத்துள்ள 3 தேர்வு கூடங்களில் 745 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு பணிகளுக்கு தாசில்தார் நிலை அலுவலர் தலைமையில் ஒரு சுற்றுக்குழு, தேர்வுப் பொருட்கள் பாதுகாக்கப்படவுள்ள மாவட்ட சார்நிலை கருவூலம், 3 தேர்வு கூடங்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உரிய நேரத்தில் தேர்வு கூடங்களுக்கு செல்வதற்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் தேர்வு கூடங்கள் உள்ள பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் நபர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வு மையம், தேர்வு தொடர்பான இதர சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உதவி மைய எண் 044-25300338, 25300339, 25300340, 18004190958 மற்றும் மின்னஞ்சல் grievance.tnpsc@tn.gov.inல் தொடர்பு கொண்டு அறியலாம்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.