/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் கமிட்டியில் மஞ்சள் ஏலம்
/
சின்னசேலம் கமிட்டியில் மஞ்சள் ஏலம்
ADDED : மே 11, 2025 04:12 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் திங்கள் கிழமையில் நடக்கும் மஞ்சள் ஏல சந்தையை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளமாறு கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சள் 2,500 ெஹக்டர் பரப்பு சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள் விளை பொருளை விவசாயிகள் ஆத்துார், ஈரோடு சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் போக்குவரத்து செலவினம், கால விரையம் ஏற்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் ஏல சந்தை துவக்கப்பட்டுள்ளது. இது, மார்ச் மாதம் முதல் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இதில் ஆத்துார், சேலம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரம், 52 விவசாயிகள் கொண்டு வந்த 51.59 குவிண்டால் மஞ்சள் 5 லட்சத்து 74 ஆயிரத்து 853 ரூபாய்க்கு விற்பனையானது. மஞ்சள் அதிகளவில் வரும் பட்சத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் ஏலம் நடத்தப்படும். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் கமிட்டிகளில் மஞ்சள் ஏலம் விரிவுப்படுத்தப்படும்.
மேலும், விவரங்களுக்கு வட்டார உதவித் தோட்டக்கலை இயக்குனர், வேளாண்மை அலுவலர் மற்றும் சின்னேசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை, 89259 02926 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

