/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்து பயிரில் மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை
/
உளுந்து பயிரில் மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை
ADDED : டிச 09, 2024 09:58 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்து பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்து காய் பிடிக்கும் தருணத்தில் மஞ்சள் தேமல் நோய் பரவி வருகிறது.
பூச்சி மூலம் பரவும் இந்த நோய்த் தாக்குதலால் உளுந்து பயிர்களின் இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகசூல் குறையும் என கவலை அடைந்துள்ளனர்.
பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் மாவட்டத்தின் பெரும் பகுதி விவசாய நிலங்களில் நீர் தேங்கி, நோய் பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. வேளாண் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு நோய் பரவி பயிர்கள் பாதிப்படைவதை தவிர்க்க விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.