/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தந்தைக்கு மது பழக்கம் இளம்பெண் தற்கொலை
/
தந்தைக்கு மது பழக்கம் இளம்பெண் தற்கொலை
ADDED : ஏப் 11, 2025 06:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தந்தையின் மது பழக்கத்தால், மனம் உடைந்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்,45; இவருக்கு 2 பெண் உட்பட மொத்தம் 3 பிள்ளைகள். இவருக்கு மதுபழக்கம் உள்ளதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த, 9ம் தேதி வழக்கம் போல மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த மகள் அபிராமி,18; வீட்டில் மின்விசிறியில் துாக்கு போட்டார். குடும்பத்தினர் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.