/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது
/
பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது
ADDED : செப் 30, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமரேசன் மனைவி துளசி, 27; இவர், கடந்த 27ம் தேதி பிற்பகல் 2:00 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மகன் அய்யனார், 30; அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து துளசியை கையை பிடித்து இழுத்து, தாக்கினார்.
துளசி கொடுத்த புகாரின் பேரில் அய்யனார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.