/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்த வாலிபர் கைது
/
அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்த வாலிபர் கைது
அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்த வாலிபர் கைது
அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : மே 03, 2025 02:05 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அனுமதியின்றி 2 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று காலை விரியூர் ஏரிக்கரை பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது, இரு நாட்டு துப்பாக்கிகளுடன் அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரைணயில் அவர் அதே ஊரை சேர்ந்த சூசைநாதன் மகன் அந்தோணிராஜ்,28; என்பதும், காப்பு காடுகளில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு துப்பாக்கிகளை வைத்திருந்ததும் தெரிந்தது.
அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தும் 50 கிராம் கருப்பு வெடிமருந்து மற்றும் 50 கிராம் பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.