/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
/
மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
ADDED : ஜூலை 07, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் காலை நேரத்தில் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப்--இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று காலை 9.30 மணிக்கு அங்கு சென்றபோது, மதுபாட்டில் விற்பனை செய்த நீலமங்கலம் காந்தி நகர் ராமசாமி மகன் அய்யனார், 32; என்பவரை கைது செய்து, 4 குவார்ட்டர் மதுபாட்டில், ரூ. 4500 பணத்தை பறிமுதல் செய்தனர்.