ADDED : செப் 22, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சின்னசேலம் அடுத்த மேல் நாரியப்பனுார் ரயில்வே கேட் அருகே சந்தேகிக்கும்படி நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் விரைந்து சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
பிடிபட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜிவ்காந்தி மகன் அன்புக்கரசன்,19; என்பதும், தப்பி ஓடியவர் பாண்டியங்குப்பத்தை சேர்ந்த ஆளமுத்து மகன் ஆனந்த்,30; என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அன்புக்கரசனை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.