ADDED : ஏப் 21, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை பகுதி, சேலம் பிரதான சாலையை சேர்ந்தவர் ராஜா, 48; இவர் தனது பைக்கை நேற்று முன்தினம், அதே பகுதி திருச்சி பிரதான சாலையில், நிறுத்திவிட்டு நடைப்பயிற்சிக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்து போது, வாலிபர் ஒருவர் அவரது பைக்கை தள்ளிக் கொண்டு செல்வதை பார்த்தார். தொடர்ந்து அவர் சத்தம் போட்டதும், அந்த வாலிபர் பைக்கை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உளுந்துார்பேட்டை போலீசார், அந்த வாலிபரை விரட்டி பிடித்தனர்.
விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்தக்குடியை சேர்ந்த காசி மகன் ஏசுதுரை, 19; என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.