UPDATED : மே 09, 2026 12:11 AM
ADDED : மே 08, 2026 11:50 PM
அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: வெங்கட்டாம்பேட்டை கிராம விவசாய நில மின்மோட்டார் ஒயரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், 48; இவர் வெங்கட்டாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு அவரது விவசாய கிணற்றில் மின் மோட்டாரில் இருந்த 16 மீட்டர் மின் ஒயரை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி மகன் நேதாஜி, 28; திருடி சென்றுள்ளார். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து நேதாஜியை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
