/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
/
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 20, 2025 12:30 AM

கள்ளக்குறிச்சி, ஜூலை 20-
தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே கடந்த மாதம் 20ம் தேதி, கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ருத்திஷ், 27; என்பவரை தியாகதுருகம் போலீசார் கைது செய்து, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில், கலெக்டர் பிரசாந்த் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ருத்தீஷை கைது செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கடலுார் மத்திய சிறையில் உள்ள ருத்தீஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.