/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது
/
நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது
ADDED : பிப் 17, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை 5:00 மணியளவில் எறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், எறையூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் கிளி என்கிற கில்பர்ட், 24; எனவும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றதும் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கிளியை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.