/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
/
வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ADDED : மே 30, 2025 04:15 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் அவதியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் குணா,21; இவர் கடந்த ஒராண்டாக தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது தவறி கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டது.
இதனால் அவருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வயிற்று வலி அதிகமானதால் வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்தார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9:30 மணிக்கு இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.