ADDED : மே 02, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் சந்தைமேட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் குருநாதன், 20; இவர், தனது பைக்கை சித்தலுாரைச் சேர்ந்த பரத் என்பவரிடம் அடமானம் வைத்து, பணத்தினை செலவு செய்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் குருநாதன் பணத்தை பிறகு தருகிறேன், பைக்கை கொடு என கேட்டதற்கு பரத் மறுத்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த குருநாதன் கடந்த 29ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.