/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை
/
துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை
ADDED : ஆக 20, 2025 07:35 AM
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் காட்டுகொட்டாய் சேர்ந்தவர் துரைசாமி மகன் மணிகண்டன், 25; இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி, காலை 11:00 மணிக்கு, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் லட்சுமி தேடியபோது, அதே பகுதியில் உள்ள வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.