/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி
/
பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி
ADDED : ஆக 20, 2025 07:35 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோகூரை சேர்ந்த சேகர் மகன் பிரவீன்குமார், 23; இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு பிரவீன்குமார், தனது பைக்கில் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்றார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பிச்சநத்தம் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, அதே திசையில் திருப்பதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ் பிரவீன்குமார் பைக் மீது மோதியது. அதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் இறந்த பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.