/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
/
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
ADDED : அக் 18, 2024 06:57 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் சேர்ந்த பழனிசாமி மகன் அஜித்குமார்,24; தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் அஜித்குமார் மீது மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் வெளியே வந்தால் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட கூடும் என்பதால், அவரது நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்து செய்தார். இதனையடுத்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் உள்ள அஜித்குமாரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தற்கான ஆணையை வழங்கினர்.