ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் யோகேஷ்,19; இவர் கடந்த மார்ச், 13ம் தேதி வீடு புகுந்து, 5 சவரன் நகை திருடியதாக, அதே கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி செல்வி என்பவர், பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், அவரை விசாரித்தனர். அவர் மீது தவறு இல்லை என தெரிந்ததால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக, அவர் வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த, 18ம் தேதி மாலை 6:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு கொண்டார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

