/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடாவடி பணம் பறிப்பால் இளைஞர்கள் பரிதவிப்பு; இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

ADDED : ஜன 14, 2025 07:17 AM
கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் நீலமங்கலம், தண்டலை, மாடூர் டோல்கேட் பகுதியில் இரவு நேரங்களில் ஆங்காங்கே நிற்கும் திருநங்கைகள், இருசக்க வாகனங்களில் வரும் இளைஞர்கள் திடீரென மடக்கி நிறுத்தி, தங்களுக்கு ஏதாவது பணம் இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்கின்றனர்.
பின்னர், ஒரு கட்டத்தில் அவர்களின் பாக்கெட்டில் இருந்து, பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். சில நேரங்களில் மிரட்டியும் பணம் பறிப்பதாவும் புகார் எழுந்துள்ளது.
அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டால், தங்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூச்சலிடுவோம் என மிரட்டுகின்றனர்.
இதனால் பணத்தை பறிகொடுத்தவர்கள், திருநங்கைகள் மீது போலீசில் புகார் கொடுக்க தயங்கிக் கொண்டு, ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு இரவு நேரங்களில் திருநங்கைகள் சிலர் அடாவடியாக பணம் பறிக்கும் சம்பவத்தை தடுத்து நிறுத்து போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.