தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செவிலிமேடு பழைய பாலத்தை சீரமைக்க ரூ.2.5 கோடி தேவை: கலெக்டர் அறிக்கை

செவிலிமேடு பழைய பாலத்தை சீரமைக்க ரூ.2.5 கோடி தேவை: கலெக்டர் அறிக்கை

செவிலிமேடு பழைய பாலத்தை சீரமைக்க ரூ.2.5 கோடி தேவை: கலெக்டர் அறிக்கை


UPDATED : நவ 21, 2026 08:04 PM

ADDED : நவ 21, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 08:04 PM ADDED : நவ 21, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: ‘செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை சீரமைக்க 2.5 கோடி நிதி தேவை’ என, அரசுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா திட்ட அறிக்கை அனுப்பி உள்ளார்.

காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில், செவிலிமேடு பகுதியில் பாலாற்றின் குறுக்கே பழைய உயர்மட்டப் பாலம் அமைந்துள்ளது. வந்தவாசி, செய்யாறு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்து பாதையாக இந்தப் பாலம் உள்ளது.

தினமும் ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மீது உள்ள சாலை பல இடங்களில் பெயர்ந்தும், இணைப்புப் பகுதிகள் சேதமடைந்தும் உள்ளன.

ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பாலத்தில் ஏற்படும் சேதங்களை அவ்வப்போது நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக சீரமைத்து வருகின்றனர்.

இருப்பினும், சில நாட்களிலேயே மீண்டும் சேதம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, பாலாற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப் பாலம் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது. புதிய பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும் நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய பாலத்தின் சேதம் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பழைய பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க 2.5 கோடி நிதி தேவை என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்.

அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய பாலம் கட்டி முடிக்கப்படும் வரை, பழைய பாலத்தின் வழியாகவே போக்குவரத்து நடைபெற வேண்டியுள்ளதால், 2.5 கோடி ரூபாயை விரைந்து ஒதுக்கி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us