/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி தமிழக அணி 'ஓவரால் சாம்பியன்'
/
தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி தமிழக அணி 'ஓவரால் சாம்பியன்'
தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி தமிழக அணி 'ஓவரால் சாம்பியன்'
தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி தமிழக அணி 'ஓவரால் சாம்பியன்'
ADDED : பிப் 04, 2025 12:40 AM

சென்னை, தேசிய அளவிலான, 'ஸ்பீடு ஸ்கேட்டிங்' சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
'ஸ்பீடு ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா' சார்பில், 24வது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், மதுரையில் உள்ள சர்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில் நடந்தது.
போட்டியில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி, ஒடிசா, மஹாராஷ்டிரா உட்பட, நாடு முழுதும் இருந்து, 15 மாநிலங்களை சேர்ந்த, 1,200 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், நான்கு வயது முதல் 16 வயது வரை உள்ளோருக்கு, பல்வேறு பிரிவு வாரியாக தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகள் முடிவில், தமிழக அணி, 1,424 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து, 259 புள்ளிகளுடன் கர்நாடகா இரண்டாம் இடத்தையும், 74 புள்ளிகளுடன் ஆந்திரா மூன்றாம் இடத்தையும், 22 புள்ளிகளுடன் தெலுங்கானா நான்காம் இடத்தையும் பெற்றன.
ஒவ்வொரு போட்டியிலும், முதல் ஐந்து இடங்களை பிடித்தோர், ஜூன் இறுதியில், இந்தோனேஷியாவில் நடக்க உள்ள, சர்வதேச போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளனர்.