sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் நகரில் குடிநீருக்கு...தட்டுப்பாடு:நகராட்சியின் மெத்தனப் போக்கே காரணம் என புகார்

/

காஞ்சிபுரம் நகரில் குடிநீருக்கு...தட்டுப்பாடு:நகராட்சியின் மெத்தனப் போக்கே காரணம் என புகார்

காஞ்சிபுரம் நகரில் குடிநீருக்கு...தட்டுப்பாடு:நகராட்சியின் மெத்தனப் போக்கே காரணம் என புகார்

காஞ்சிபுரம் நகரில் குடிநீருக்கு...தட்டுப்பாடு:நகராட்சியின் மெத்தனப் போக்கே காரணம் என புகார்


ADDED : ஜூலை 13, 2011 05:11 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான குடிநீர் வழங்க, போதுமான வசதிகள் இருந்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு, நகராட்சியின், நிர்வாகக் குறைபாடே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த பிரச்சனைக்கு நகராட்சி ஊழியர்கள் தான் காரணம் என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.''நகராட்சி ஊழியர்கள், குடிநீர் தொட்டிகளில் முறையாக தண்ணீரை ஏற்றுவதில்லை. அதுவே, குடிநீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். வீடுகளில் மின் மோட்டார்கள் பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும்,'' என, கவுன்சிலர் கம்ரூனிசா கூறினார்.''மடம் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில், 50 சதவீதம் கூட தண்ணீர் ஏற்றப்படுவதில்லை. முன்பு, 2 மணி நேரம் தண்ணீர் வந்தது.

தற்போது, அரை மணி நேரம் கூட வருவதில்லை. பிள்ளையார்பாளையம் ஒதியடிமேடை பகுதியில், இரண்டு வால்வுகள் உள்ளன. மடம் தெரு குடிநீர் தொட்டிக்கு, தண்ணீர் ஏறும் போது, பெரியகாஞ்சிபுரம் பகுதிக்கு, குடிநீர் செல்வதை தடுக்க வேண்டும். அதை செய்வதில்லை. ஓட்டல்களுக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. பலர் தொட்டி கட்டி, குடிநீரை தேக்கி வைக்கின்றனர். இவற்றுக்கு, நகராட்சி ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர். இவற்றை தடுத்தால், குடிநீர் பற்றாக்குறை நீங்கும்,'' என, கவுன்சிலர் பாலு கூறினார்.ஆனால், நகராட்சி ஊழியரகள் தரப்பில், மக்கள் மோட்டார்கள் வைத்து குடிநீர் எடுப்பதே இதற்கு காரணம் என, நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் கூறினார்,''குடிநீர், போதுமான அளவு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதிகமாக, மின் மோட்டார்களைப் பயன்படுத்துவதால், ஒரு சில பகுதிகளில் குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது. மின்தடை ஏற்பட்டால், ஜெனரேட்டர் பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதை தடுக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.''நீர் நிலைகளிலிருந்து, தடையின்றி குடிநீர் தொட்டிகளுக்கு, குடிநீர் ஏற்றுவதற்கு வசதியாக, 2005ம் ஆண்டு 'ஆற்றல் சேமிப்பு திட்டம்' கீழ், 98 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளுக்கு மின் மோட்டார் தொடர்பாக எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப் பட்டது.

புதிதாக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. திருப்பாற்கடல் தண்ணீர் சுவையற்றதாக இருந்தாலும், போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால், கடந்த சில மாதங்களாக போதிய குடிநீர் கிடைக்காததால், மக்கள் தண்ணீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஊழியர்கள் முறையாக குடிநீரை, குடிநீர் தொட்டிகளில் ஏற்றாததே, குடிநீர் தட்டுப்பாடுக்கு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வப்போது, மின் மோட்டார் பழுது பார்க்க, எனக் குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது. இதிலும், முறைகேடுகள் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.அறம்வளர்த்த நாதன்.






      Dinamalar
      Follow us