/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூதாட்டியை கொன்று 10 சவரன் நகை திருட்டு
/
மூதாட்டியை கொன்று 10 சவரன் நகை திருட்டு
ADDED : மே 28, 2024 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, கட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கல்பா,65; நேற்று முன் தினம் இரவு, வீட்டில் தனியாக இருந்துள்ளார். மர்ம நபர்கள் சிலர், தனியாக இருந்த மூதாட்டி முகத்தை, தலையனையால் பொத்தி, துணிகரமாக கொலை செய்து உள்ளனர்.
அவரின் கழுத்தில் அணிந்திருந்த, 10 சவரன் தங்க நகைகளை, அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். தகவல் அறிந்த, காஞ்சிபுரம் தடய அறிவியல் போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொலை குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து, வருகின்றனர்.