/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு வணிகர்கள் விழிப்புணர்வு
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு வணிகர்கள் விழிப்புணர்வு
ADDED : ஏப் 04, 2024 11:50 PM

காஞ்சிபுரம்:தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில், லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் நடந்தது.
விஷ்ணு காஞ்சி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுதாகர், தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், காஞ்சிபுரம் ரயில்வே சாலை, காந்தி சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கடைகளில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இதில், மாவட்ட தலைவர் வேலுமணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

