/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் 107 புதிய குளங்கள்
/
உத்திரமேரூரில் 107 புதிய குளங்கள்
ADDED : ஆக 06, 2024 02:06 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில், 2024- - 25ம் ஆண்டுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் துவங்கி நடைபெறுகின்றன.
ஊராட்சிகளில் புதிய குளங்கள் ஏற்படுத்தி, அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் தற்போது, புதிதாக குளம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் கூறியதாவது:
உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஊராட்சிகள் தோறும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் புதிதாக குளம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. நீர்நிலை பகுதிகள் மற்றும் கிராம பொது இடங்கள் என, 107 புதிய குளங்களுக்கான பணி தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன,
இவ்வாறு அவர் கூறினார்.