/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆகாய கன்னியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம்
/
ஆகாய கன்னியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம்
ADDED : மே 07, 2024 03:49 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில், ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், உலக நன்மை கருதியும், குடும்ப நன்மைக்காக அரசு - வேம்பு விருட்சங்களின், சிவபார்வதி திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதியுலா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 7:00 மணிக்கு பாலதர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து, பணா முடீஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் புறப்பாடும், ஆகாய கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10:30 மணிக்கு சிவ பார்வதி திருக்கல்யாண சங்கல்பம், பஞ்சகவ்ய அபிஷேகம் நடந்தது.
பிற்பகல் 12:30 மணிக்கு அரசு-வேம்பு சிவபார்வதி திருக்கல்யாணமும், மஹா தீபாராதனையும் நடந்தது.
மாலை 6:30 மணிக்கு சிவபார்வதி திருக்கல்யாண அலங்காரத்தில் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர்.
உற்சவத்திற்கான ஏற்பாட்டை அனைத்து செங்குந்தர் குடும்பத்தினர், பாலதர்ம சாஸ்தா ஆலய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.