/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 12.65 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம்
/
மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 12.65 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம்
மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 12.65 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம்
மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 12.65 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம்
ADDED : ஆக 12, 2024 03:23 AM

காஞ்சிபுரம் : கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 12.65 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள், மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என, சிறு, குறு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பேசினார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மற்றும் தமிழகம் இலவச பயிற்சி மையம் சார்பில், விவசாய கண்காட்சி காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். விவசாய தொழில் நிறுவனங்களின் தலைவர் எழிலன் முன்னிலை வகித்தார்.
சிறு, குறு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் அன்பரன் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், 1,48,412 கோடி ரூபாயை வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 12.65 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள், மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 354.90 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் திட்டத்திற்கு, 251.91 கோடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில், 8,688 விவசாயிகளுக்கு, 71.86 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு பேசியதாவது:
நானும் விவசாயி தான். பாரம்பரிய ரக நெல்லை பயிரிடும் போது, அது நமக்கு சரியாக வரவில்லை. பாரம்பரிய ரக நெல் பயிரிடுவதற்கு ஏற்ப, ஐந்தாண்டு மண் வளத்தை மேம்படுத்த வேண்டும்.
அப்போது தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். மேலும், விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது தான், நல்ல வருவாய் ஈட்ட முடிகிறது.
தற்போது வரை, 1.50 லட்சம் பேருக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

