/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிண்டி மருத்துவமனையில் தினமும் 1,300 முதியோருக்கு சிகிச்சை
/
கிண்டி மருத்துவமனையில் தினமும் 1,300 முதியோருக்கு சிகிச்சை
கிண்டி மருத்துவமனையில் தினமும் 1,300 முதியோருக்கு சிகிச்சை
கிண்டி மருத்துவமனையில் தினமும் 1,300 முதியோருக்கு சிகிச்சை
ADDED : ஜூன் 26, 2024 08:44 AM
சென்னை : சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில், தேசிய முதியோர் நல மருத்துவமனை, கடந்த பிப்., 25ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மொத்தம் 60 டாக்டர்கள், 10 உயர் சிறப்பு டாக்டர்கள், 216 நர்ஸ்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள் உள்ளிட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 1,000த்திற்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 1,300 நோயாளிகளாக சிகிச்சை பெற வந்துள்ளனர்.
தேசிய முதியோர் நல மருத்துவமனை பொறுப்பாளர், டாக்டர் எஸ்.தீபா கூறியதாவது:
இதுவரை உள்நோயாளிகளாக 1,715 பேர் அனுமதிக்கப்பட்டு, 1,481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 1,826 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 322 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நான்கு மாதங்களில், 4,169 பேருக்கு இதயநல சிகிச்சைகளும், 3,127 பேருக்கு எலும்பு மூட்டு சிகிச்சைகளும், 13,002 பேருக்கு இயன்முறை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 54,219 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.