/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்
/
' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜூலை 14, 2024 12:17 AM
காஞ்சிபுரம்,:தமிழகம் முழுதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, குரூப் -1 என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- - 1 தேர்வு நடந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20 தேர்வு மையங்களில், 6,150 பேர், குரூப் -- 1 தேர்வு எழுத அனுமதி அளித்தனர். இதில், 1,622 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இரண்டு பறக்கும் படை மற்றும், 20 கண்காணிப்பு குழுவினர் குரூப் -- 1 தேர்வு மையங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இருந்தனர்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதிஉள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.