/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
17 துணை தாசில்தார் பணியிட மாற்றம்
/
17 துணை தாசில்தார் பணியிட மாற்றம்
ADDED : மே 03, 2024 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் அலகில் பணியாற்றும் தாசில்தார், துணை தாசில்தார் பணி நிலைகளில், நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நில எடுப்பு துணை தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், மண்டல துணை தாசில்தார் என, பல்வேறு பணியிடங்களில் பணியாற்றி வரும், 17 துணை தாசில்தார்களை, பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், உடனடியாக பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.