/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒன்றரை மாதங்களில் 178 சதவீதம் அதிக மழை பதிவு
/
ஒன்றரை மாதங்களில் 178 சதவீதம் அதிக மழை பதிவு
ADDED : ஜூலை 15, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய ஐந்து தாலுகாவிலும் பதிவாகும் மழையளவு சராசரியாக கணக்கிட்டு, மழையின் அளவு பதியப்படும்.
அந்த வகையில், தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் மாதம் முதல், ஜூலை 13ம் தேதி வரை கணக்கீடு செய்ததில், 11.1 செ.மீ., மழை சராசரியாக பெய்திருக்க வேண்டும்.
ஆனால், 178 சதவீதம் அதிகமாக, 31.0 செ.மீ., மழை பதிவாகியிருப்பதாக, மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய இணையதளம் தெரிவித்துள்ளது.