/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படவேட்டம்மனுக்கு வரும் 17ல் ஆடி திருவிழா
/
படவேட்டம்மனுக்கு வரும் 17ல் ஆடி திருவிழா
ADDED : ஜூலை 04, 2024 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்ட்ரேட், அய்யப்பா நகர் தாய் படவேட்டம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 47வது ஆண்டு ஆடி திருவிழா வரும் 17ம் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகத்துடன் துவங்குகிறது.
அதை தொடர்ந்து காலை 7:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும், 8:00 மணிக்கு கூழ்வார்த்தலும், 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 7:30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிட்டு வர்ணிப்பும், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.