/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு அமைப்பு தினம் ரூ.1.89 கோடி கடனுதவி
/
கூட்டுறவு அமைப்பு தினம் ரூ.1.89 கோடி கடனுதவி
ADDED : ஜூலை 08, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சர்வதேச கூட்டுறவு அமைப்பு தினம் விழா நேற்று முன்தினம் துவங்கியது.
விழா போட்டிகளை, காஞ்சிபுரம் கூட்டுறவுமண்டல இணைப்பதிவாளர் ஜெயாஸ்ரீ தலைமை வகித்தார்.
கூட்டுறவு மேலாண் மாணவர்கள் இடையே, பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
ரத்தத்தான முகாம், சேவைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கீழ்கதிர்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 1.89 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.