/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி
/
2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி
ADDED : செப் 09, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வருபவர்பிரேம்குமார். இவர் வசித்து வரும் வீட்டில் கடந்த 6ம் தேதி மூன்று இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில், பிரேம்குமார்,அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது 1-2 வயது மகன்களும் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர். இதில், குழந்தைகள் நவிலன், மிதுலன் இருவரும் உயிரிழந்தனர்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா, நேற்று முன்தினம் இறந்தார். பிரேம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.