ADDED : ஏப் 02, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
சென்னை வேளாண் துறை துணை இயக்குனராக இருந்த கிருஷ்ணவேணி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் திட்டங்கள் பிரிவு துணை இயக்குனராக நேற்று பொறுப்பேற்றார்.
அதேபோல, சென்னை வேளாண் விற்பனை பயிற்சி நிலைய உதவி இயக்குனராக இருந்த சுமதி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இருவருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

