/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் வெண்டை கிலோ 20 ரூபாய்
/
சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் வெண்டை கிலோ 20 ரூபாய்
சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் வெண்டை கிலோ 20 ரூபாய்
சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் வெண்டை கிலோ 20 ரூபாய்
ADDED : ஆக 04, 2024 01:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் வெண்டை, காஞ்சிபுரம் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
காஞ்சிபுரம் சந்தை மற்றும் சில்லறை விற்பனை காய்கறி கடைகளில், கடந்த மாதம் கிலோ வெண்டை 80 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ வெண்டை 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் ரயில்வே சாலை, காய்கறி வியாபாரி எஸ்.வித்தகன் கூறியதாவது: இரு மாதங்களுக்கு முன் வெயில் காரணமாகவும், சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இல்லாததால், வெண்டை விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த மாதம் கிலோ வெண்டை 60- - 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கோடை மற்றும் பருவமழை காரணமாக வெண்டை விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால்,. விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கிலோ வெண்டை 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.