/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில்களில் உண்டியல் வருவாய் ரூ.3 லட்சம்
/
கோவில்களில் உண்டியல் வருவாய் ரூ.3 லட்சம்
ADDED : ஜூன் 13, 2024 11:38 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அமிர்தவல்லி தாயார் சமேத திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, மேலாளர் சுரேஷ், ஆய்வாளர் திலகவதி ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.
இதில், 1 லட்சத்து 79,987 ரூபாய் ரொக்கம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
அதேபோல, தாமல் வராகீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், 33,391 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
இதன் வாயிலாக இரு கோவில்களிலும், உண்டியல் வாயிலாக 2 லட்சத்து 13,378 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.