/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு 1,750 இடங்களுக்கு 3,410 பேர் விண்ணப்பம்

ADDED : மே 23, 2024 11:10 PM
காஞ்சிபுரம், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரது பிள்ளைகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், இலவசமாக சேர்ந்து படிக்க முடியும்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்டு, சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான விண்ணப்பம், ஏப்.,22 முதல், மே 20ம் தேதி வரை பெறப்படும் என, கல்வித்துறை அறிவித்திருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 நர்சரி பிரைமரிபள்ளிகளிலும், 57 மெட்ரிக் பள்ளிகள் என, மொத்தம் 137 பள்ளிகளில் உள்ள, 1,750 இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஒரு மாதமாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் கால அவகாசம் முடிந்த நிலையில், 3,410 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளில் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 25 சதவீத இடங்களுக்கு மேலாக, அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், வரும் 28ல், குலுக்கல் முறையில், கல்வி இடங்கள் நிரப்பப்படும்.