/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 366 மனுக்கள் ஏற்பு
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 366 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 27, 2024 11:32 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராம மந்த வெளியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, கோவிந்தவாடி ஊராட்சி தலைவர் சரிதா தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த முகாமில், பொது மக்களிடம் இருந்து, 366 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஏழு பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை, ஏழு பேருக்கு பட்டா, இரண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிக்கு காசோலை, ஆறு பேருக்கு வருவாய், ஜாதி சான்று என, 22 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., ஆகிய இருவரும் வழங்கினார்.
முன்னதாக, கோவிந்தவாடி அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பு விழா, கோவிந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- - மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் உடற்பயிற்சிக்கூட கட்டடத்திற்கு அடிக்கல் நடும் திட்டங்களை இருவரும் துவக்கி வைத்தனர்.
இதில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊவேரி, படுநெல்லி, புதுப்பாக்கம், வேளியூர் ஆகிய ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.