/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 எருமைகள் பலி
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 எருமைகள் பலி
ADDED : ஆக 27, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பட்டறைபெருமதுார் பகுதியில், இரவு நேரங்களில் கால்நடைகள் உலா வருகின்றன.
வழக்கம் போல மேய்வதற்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த எருமை மாடுகள், சாலையில் படுத்திருந்தன. நேற்று காலை அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், எருமை மாடுகள் மீது மோதியுள்ளது.
இதில் நான்கு எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மூன்று எருமை மாடுகள் படுகாயமடைந்தன.
காயமடைந்த மாடுகள் சீத்தஞ்சேரி கோசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.