/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 62 திருமணங்கள்
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 62 திருமணங்கள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 62 திருமணங்கள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 62 திருமணங்கள்
ADDED : செப் 09, 2024 04:31 AM

திருப்போரூர் : சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால், கோவிலில் திரு மணம் செய்ய, 62 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
மேலும், வேண்டு தலின் காரணமாக, முன்பதிவு செய்யாமல் பலரும் திருமணம் செய்ய வந்திருந்தனர். இதன் காரணமாக, கோவிலில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக நின்று திருமணம்செய்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்கள் பலரும், தங்களது வாகனங்களை கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றனர்.
மாடவீதி மற்றும் மற்ற தெருக்களில் கட்டப் பட்டுள்ள திருமண மண்டபங்களில், வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், திருமணங்களுக்கு வந்தவர்களும் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர்.
இதன் காரணமாக, ஓ.எம்.ஆர்., சாலை, மாடவீதி, திருவஞ்சாவடி தெரு, வணிகர் தெருக்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்போரூர் மற்றும்சுற்றியுள்ள கிராம மண்டபங்களில் திருமணம் முடித்து, கந்தசுவாமி கோவிலுக்கு வந்துவழிபட்டு சென்றனர்.