/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிகளவில் பாரம் ஏற்றிச் சென்ற 9 லாரிகளுக்கு 6.26 லட்சம் அபராதம்
/
அதிகளவில் பாரம் ஏற்றிச் சென்ற 9 லாரிகளுக்கு 6.26 லட்சம் அபராதம்
அதிகளவில் பாரம் ஏற்றிச் சென்ற 9 லாரிகளுக்கு 6.26 லட்சம் அபராதம்
அதிகளவில் பாரம் ஏற்றிச் சென்ற 9 லாரிகளுக்கு 6.26 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 31, 2024 09:34 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கல்குவாரிகளில் இருந்தும், கல் அரவை நிலையங்களில் இருந்தும், எம். சாண்ட், கருங்கல் ஜல்லி, சக்கை உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரிகள் சென்னை - ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி - குன்றத்துார், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
கனரக லாரிகளில் அதிக அளவிலான பாரம் எடுத்துச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், வாலாஜாபாத் அருகே உள்ள வெண்குடி சந்திப்பு பகுதியில், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், தாசில்தார் கருணாகரன், மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் வந்த கனரக லாரிகளை ஆவணங்களை சரி பார்த்த நிலையில் அதிக அளவில் பாரம் ஏற்றி வந்த ஒன்பது லாரிகள் கண்டறியப்பட்டன. இந்த லாரிகளில் கொண்டு வரப்பட்ட அதிக பார எடையை கணக்கிட்டு 6 லட்சத்து, 26,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.